மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கிளர்ச்சி இயக்கம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அக்டோபர் 11ம் தேதி மக்கள் கிளர்ச்சி இயக்கம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் தமிழகச் செயலாளர் சங்கரய்யா வெளியிட்ட அறிக்கை:
மத்திய பாஜக - திமுக கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுஏழை-நடுத்தர மக்கள் வாழ்க்கை மீது தொடுக்கப்பட்ட கொடுந்தாக்குதலாகும்.
பாஜக - திமுக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் கிராமப் புறங்களிலும், நகரப்புறங்களிலும் வறுமையும்வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. விலைவாசி நாளும் உயர்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைகிற நிலையில் உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கு விலையைஉயர்த்துவது மக்களை வஞ்சிக்கும் மோசடிச் செயல்.
பாஜக - திமுக கூட்டணி அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்தும், பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 11ம் தேதி மக்கள் பங்கேற்புடன் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும்என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications