தமிழகத்தை காஷ்மீராக்க தீவிரவாதிகள் முயற்சி .. சுவாமி
சென்னை:
சந்தன வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையை அனுப்ப வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசாமி கூறினார்.
சென்னையில் சுவாமி அளித்த பேட்டி:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, முருகன் உள்பட 4 பேருக்குத்தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. இதுபற்றி டெல்லியில் உள்துறை அமைச்சர்அத்வானியை சந்தித்துப் பேசினேன்.
அவரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் இந்த வழக்கு விரைவில்முடிக்கப்பட்டு விடும் என்று உறுதியளித்துள்ளார்.
ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன் அறிக்கையில்,விடுதலைப்புலிகளுக்கும், திராவிடக் கழகத் தலைவர் வீரமணிக்கும் உள்ள தொடர்புபற்றி கூறப்பட்டுள்ளது. எனவே வீரமணியை தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைதுசெய்ய வேண்டும். தி.க.வை தடை செய்ய வேண்டும்.
ஜெயின் கமிஷன் அறிக்கை தொடர்பாக சோனியாவை சந்தித்து வீரமணிக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினேன். எனவே தி.க..வுடன்காங்கிரஸ் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றேன். அவரும் அதைஏற்றுக் கொண்டார்.
ஆனால், சென்னையில் நடந்த பெரியார் விழாவில் வீரமணியுடன் குலாம்நபிஆசாத்தும் கலந்து கொண்டுள்ளார். இது எனக்கு புரியாத புதிராக உள்ளது.
விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் சந்தனவீரப்பன் இருக்கிறான். இவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கைக் கெடுத்து தமிழகத்தை காஷ்மீராக்க திட்டமிட்டுள்ளனர்.
எனவே அதிரடிப்படையை அனுப்பி தான் ராஜ்குமாரை மீட்க வேண்டும்.இல்லாவிட்டால் அவர் உயிரோடு திரும்புவது கஷ்டம் என்றார் சாமி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications