செயற்கைக் கோள் மூலம் திருடுபோன ஆம்புலன்ஸ் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

நியூசிலாந்தில் காணாமல் போன ஆம்புலன்ஸை செயற்கைக் கோள் உதவியுடன்போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளி ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு தனது தாய்வீட்டுக்குச் சென்று விட்டார். அவரிடமிருந்து தற்போது ஆம்புலன்ஸை கிறிஸ்ட்சர்ச்நகர் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள செயின்ட் ஜான் மருத்துவமனைக்குச் சொந்தமானது இந்தஆம்புலன்ஸ். செவ்வாய்க்கிழமை இந்த மருத்துவமனைக்கு ஒரு நோயாளிவந்திருந்தார். கால் வலிக்காக அவர் வந்திருந்தார்.

சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மருத்துவமனை வளாகத்திலிருந்து ஆம்புலன்ஸைதிருடிக் கொண்டு சென்று விட்டார். அப்போதுதான் ஆம்புலன்ஸிருந்து ஒருநோயாளியை இறக்கியிருந்தனர்.

நோயாளியை இறக்கி விட்டுவிட்டு, மருத்துவமனை விதிப்படி ஆம்புலன்ஸிலேயேசாவியை விட்டு விட்டு மருத்துவமனை ஊழியர்கள் சென்றனர். இதைப் பயன்படுத்திக்கொண்ட அந்த நோயாளி, ஆம்புலன்ஸை தள்ளிக் கொண்டு போய் விட்டனர்.

திருடப்பட்ட ஆம்புலன்ஸைக் கண்டுபிடிக்க கிறிஸ்ட்சர்ச் நகர் போலீஸார் செயற்கைக்கோள் உதவியை நாட முடிவு செய்தனர். செயற்கைக் கோள் மூலம் இயங்கும்கண்காணிப்பு மையத்தை அணுகிய போலீஸார், அதன் மூலம் ஆம்புலன்ஸ் இருக்கும்இடத்தைக் கண்டுபிடித்தனர்.

நியூசிலாந்திலுள்ள அவசரகால வாகனங்களில் செயற்கைக் கோள் உதவியுடன்இயங்கும் தகவல் தொடர்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். எனவேகண்காணிப்பு மையம் மூலம் இந்த ஆம்புலன்ஸை எளிதாக கண்டுபிடிக்க முடிந்ததுஎன போலீஸார் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+