இலாகா மாற்றம்: பிரதமரிடம் திமுக பேசலாமே...
பொள்ளாச்சி:
தி.மு.க. அமைச்சர் எச்.ராஜாவின் துறை மாற்றம் செய்யப்பட்டது குறித்து அக் கட்சி அதிருப்தியடைந்திருந்தால்,இது பற்றி பிரதமரிடம் திமுக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என அகில இந்திய பா.ஜ.க. துணைத் தலைவர்ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
அவர் கூறுகையில், மேற்கு வங்காள ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுவிரும்பவில்லை எனறார்.
பொள்ளாச்சியில் தமிழக பா.ஜ., செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஜனா. கிருஷ்ணமூர்த்திநிருபர்களிடம் கூறுகையில்,
மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை இன்னும் மேம்படவில்லை. அங்கு தேசிய ஜனநாயக் கூட்டணியின்தொண்டர் கொலை செய்யப்பட்ட பின்னர், இந்த கொலையில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளின் பட்டியல்மாநில அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசு தலையிட வேண்டியிருக்கும். ஆனால்மேற்கு வங்காளத்தில் அரசியல் சட்டப் பிரிவு 356யை அமல்படுத்த பா.ஜ.,விரும்பவில்லை. பீகார் கலைப்பு கற்றுத்தந்த பாடத்தை நாங்கள் மறக்கவில்லை. இதற்குப் பதிலாக நாங்கள் பொதுமக்களிடம், ஜோதிபாசுவின் ஆட்சிகுறித்து விளக்கி பிரச்சாரம் செய்யவுள்ளோம்.
மம்தா பானர்ஜியுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. மம்தா பானர்ஜியின் கட்சிக்கு மத்திய அமைச்சரவைவிரிவாக்கத்தில் இடம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுவது தவறு. அவர்களுக்கென ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள துறையில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யத் தயாராக உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள் மத்திய அரசிடம் உதவி கோரலாம்.
தி.மு.க. அமைச்சர் எச். ராஜாவின் துறை மாற்றம் குறித்து தி.மு.க அதிருப்தியடைந்திருந்தால், இது பற்றிபிரதமரிடமே நேரடியாக தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தலாம்.
இந்தியா விரைவில் வலிமை படைத்த நாடாக மாறும். அரசின் சாதனைகள் குறித்து தமிழகத்தில் அக்டோபர் 13முதல் 20 ம் தேதி வரை மக்களிடம் விளக்கிக் கூறவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications