பங்காரு லட்சுமணனுக்கு கருப்புக் கொடி: 346 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு கறுப்புக் கொடி காட்டமுயன்ற 346 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் நடந்த பாரதீய ஜனதாக் கட்சி செயற் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் பங்காரு லட்சுமணன் பொள்ளாச்சிவந்துள்ளார்.

பொள்ளாச்சி சர்க்யூட் ஹவுசில் அவர் தங்கியிருந்தார். வியாழக்கிழமை காலை இந்துமுன்னணி அமைப்பைச் சேர்ந்த 346 பேர் சர்க்யூட் ஹவுசிற்கு முன்பு கூடிஆர்ப்பாட்டம் செய்ய கறுப்புக் கொடியுடன் கூடினர்.

இவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தி 346 பேரையும் கைது செய்தனர். அனைவரும்போலீஸ் பயிற்சி மைதானத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

முன்னதாக புதன்கிழமை கோவை அருகே உள்ள காருண்யா தொழில்நுட்பக்கல்லூரியில் நடந்த சாப்ட்வேர் தொழில்நுட்ப மைய அடிக்கல் நாட்டு விழாவில்பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் கலந்து கொண்டார்.

சிறுபான்மையினரின் கல்வி நிறுவனமான இதில் அவர் கலந்து கொள்ளக் கூடாது எனஇந்து முன்னணியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, பங்காருலட்சுமணன் ஹெலிகாப்டரில் சென்று கலந்து கொண்டார். அதே சமயம், பங்காருலட்சுமணனுக்கு ஆலாந்துறை அருகே கறுப்புக் கொடி காட்ட தயாராக இருந்த 14 இந்துமுன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து பொள்ளாச்சியில் பங்காரு லட்சுமனணிடம் கேட்டபோது அவர், இதுபற்றி எனக்குத் தெரியாது எனப் பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+