காவிரி பெருக்கெடுக்கிறது .. நிறைகிறது மேட்டூர் அணை
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததையடுத்து, மேட்டூர் அணை நிரம்பும்நிலையில் உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இந்த மழையையடுத்து, காவிரி அணைக்கு வரும் தண்ணீர் அளவின் அதிகரித்துள்ளது.மேலும், கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர்த் திறந்து விடப்பட்டது.
இதனையடுத்து கபினியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதியில்யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 79 ஆயிரத்து 913 கன அடியாகஇருந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி அணையின் மொத்தக் கொள்ளளவான 120 அடிக்கு இன்னும் 4 அடியேமீதமுள்ளது. அணை அடுத்த 24 மணி நேரத்தில் நிரம்பும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் வினாடிக்கு 16 ஆயிரத்து 567 அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications