ஸ்தம்பித்துப் போன தலைமைச் செயலகம்: முதல்வரின் கார் வழிமறிப்பு
சென்னை:
தமிழகத்தின் தலைமைச் செயலகமான சென்னை கோட்டை வியாழக்கிழமை ஸ்தம்பித்தது.
அரசு ஊழியர்கள் அனைவரும் திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கியதால் தலைமைச் செயலகத்தில் பதட்டம், பரபரப்பும்காணப்பட்டது.
கோட்டையில் தான் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள், தமிழக சட்டசபை ஆகியவை அமைந்துள்ளன.
சென்னை மாநகர அரசு பஸ்களில் அலுவலகம் வந்த அரசு ஊழியர்களை சோதனையிட்ட பஸ் செக்கிங் இன்ஸ்பெக்டர்களைகண்டித்து இந்த திடீர் போராட்டத்தை அரசு ஊழியர்கள் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல்வரின் காரை வழி மறிக்க முயன்றபோது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினர்.இதில் இரண்டு அரசு ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும் மாநகர பஸ்களில் வரும் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை திடீர்சோதனையிடப்பட்டனர்.
அவர்களுக்குரிய அடையாள அட்டைகள் இருக்கிறதா என்பதை கண்டறிய போக்குவரத்துக் கழக டிக்கெட்பரிசோதனையாளர்கள் (செக்கிங் இன்ஸ்பெக்டர்ஸ்) முற்பட்டனர். சென்னையில் போலி போலீஸ் அடையாள அட்டையுடன்மாநகர பஸ்களில் பயணம் செய்த ஒருவரை கையும் களவுமாக பிடித்ததை அடுத்து இந்த அதிரடிச் சோதனையில் போக்குவரத்துக்கழகம் ஈடுபட்டது.
ஒரு பஸ்சில் வந்த அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளை வாங்கிய சுப்ரமணியம் என்ற செக்கிங் இன்ஸ்பெக்டருக்கும்,அரசு ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை அடுத்து அந்த செக்கிங் இன்ஸ்பெக்டரை இழுத்துக்கொண்டு, கோட்டையில் உள்ள போக்குவரத்துத் துறை செயலாளரிடம் அழைத்துச் சென்றனர் அரசு ஊழியர்கள்.
இதை ஆட்சேபித்து மற்ற செக்கிங் இன்ஸ்பெக்டர்களும் கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கே தகராறு வலுத்தது. இதனால்சுப்ரமணியம் என்ற செக்கிங் இன்ஸ்பெக்டரை வெளியே விட மறுத்தனர். உள்ளேயே ஏறக்குறைய சிறை வைத்ததுபோல்முற்றுகையிட்டு விட்டனர்.
எல்லா ஊழியர்களும் வேலையை போட்டு விட்டு இந்த பிரச்னையில் ஈடுபட போலீசுக்கு தகவல் பறந்தது. போலீசார் தலையிட்டுஅரசு ஊழியர்களின் பிடியில் இருந்த செக்கிங் இன்ஸ்பெக்டரை மீட்டனர். அதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுப்ரமணியத்தை ஏற்றிக் கொண்டு கிளம்பிய போலீஸ் ஜீப்பை நகர விடாமல் அரசு ஊழியர்கள் சுற்றி உட்கார்ந்தனர். இதனால்பெரும் கிளர்ச்சி வெடித்தது. எல்லா துறை அரசு ஊழியர்களும் ஒன்று சேர்ந்து சாலைக்கு வந்தனர்.
கோட்டை வட்டாரமே பதட்டமானது. போலீசார் சமாதான முயற்சிகள் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் 10 மாடிக் கட்டடத்தில்கலெக்டர்கள் மாநாடு முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்து கொண்டிருந்தது.
அதை முடித்துக் கொண்டு முதல்வர் காரில் ஏறிக் கிளம்பினார். போராட்டக் கூட்டம் அவரது காரை நோக்கி ஓடியது. காரை வழிமறித்து முறையிட முற்பட்டனர். போலீசார் நிலைமையை அறிந்து தடியடி நடத்தி அரசு ஊழியர்களை விரட்டினர். இதில் இருவர்மண்டை உடைந்தது.
போலீஸ் உயரதிகாரிகள், அரசுத் துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். மாலை வரையில் ஊழியர்கள் அலுவலகம் செல்லவில்லை.
தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட செக்கிங் இன்ஸ்பெக்டரை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications