அவர்கள் வரவில்லை..அதனால் நானும் வரவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்பிக் ஊழல் வழக்கில் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆஜராகவில்லை. வீணான அலைச்சலை தவிர்ப்பதற்காக தனி நீதிமன்றத்தில் தாம்ஆஜராகவில்லை என்று ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவியாழக் கிழமை தனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வியாழக் கிழமை காலை விசாரணை துவங்கியதும் ஜெயலலிதா வரவில்லை. அவரது வக்கீல் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொழில் துறை செயலாளர் சி.ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தையாஆகியோர் ஆஜராகப் போவதில்லை என்பதை என் வக்கீல் மூலம் அறிந்து கொண்டேன். எனவே வீணான அலைச்சலை தவிர்ப்பதற்காக நானும்வரவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்பிக் நிறுவனத்தில் அரசுக்கென இருந்த பங்குகளை குறைந்த விலைக்கு ஸ்பிக் நிறுவன அதிபர்களுக்கே விற்றதால் ரூ.28கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை தான் தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+