ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்: இங்கிலாந்துக்குப் பெரிய வெற்றி

Subscribe to Oneindia Tamil

நைரோபி:

ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து பெரிய வெற்றியைப் பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

பங்களாதேஷுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட் செய்தது. பங்களாதேஷ் வீரர்கள் சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தனர்.

துவக்க ஆட்டக்காரர் ஓமர் அவுட்டாகாமல் 63 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து ரஹ்மான் 46 ரன்களும், இஸ்லாம் 30 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியில் ஈலம் 3 விக்கெட்டுகளையும் ஒயிட், கேட்டிக் இருவரும் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து 44 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 236 ரன்கள் எடுத்து எளிதான வெற்றியைப் பெற்றது.

கேப்டன் நசீர் ஹுசேன் 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஸ்டீவர்ட் 83 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

83 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ஸ்டீவர்ட் ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியை அடுத்து இங்கிலாந்து கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அடுத்து கால் இறுதியில் வரும் 10-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

ஸ்கோர்:

பங்களாதேஷ் - 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள்.

இங்கிலாந்து - 44 ஓவரில் 2 விதகெட் இழப்புக்கு 236 ரன்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+