குறுக்கு விசாரணையை வேகப்படுத்த ஜெ. வக்கீலுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான ரூ. 66 கோடி சொத்து சேர்ப்பபு வழக்கில்,அரசுத் தரப்பு சாட்சிகளின் குறுக்கு விசாரணையை விரைவாக முடிக்குமாறுஜெயலலிதா தரப்பு வக்கீலுக்கு தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள்உத்தரவிட்டார்.

ஜெயலலிதா மற்றும் நான்கு பேர் மீது இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போதுஅரசுத் தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்துள்ளது. தற்போது குறுக்கு விசாரணைதொடங்கியுள்ளது.

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன், ஜெயலலிதாவுக்கு நிலம் விற்றது தொடர்பாகசாட்சியம் அளித்திருந்தார். அவரையும், வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்திற்குசமையல் செய்த சமையல்காரர் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடந்துள்ளது.

இந்த நிலையில் விரைவாக குறுக்கு விசாரணையை முடிக்குமாறு ஜெயலலிதா தரப்புவக்கீலுக்கு முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.இன்னும் 50 சாட்சிகள் இருப்பதால் விரைவாக குறுக்கு விசாரணையைமேற்கொள்ளுமாறு நீதிபதி கூறினார்.

இதற்கிடையே, ஸ்பிக் வழக்கு தொடர்பாக வியாழக்கிழமை ஜெயலலிதாநீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+