3 மாத குழந்தையின் பிணம் தோண்டியெடுப்பு
ஈரோடு :
மர்மமான முறையில் இறந்து போன 3 மாத குழந்தையின் உடல் தோண்டி எடுத்துபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானியில் குருமாந்தூரில் வசித்து வருபவர் சின்னப்பையன்.இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. இவர் தனது இரண்டாவது மனைவியுடன்அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த சண்டையினால் இரண்டாவது மனைவி மகாலட்சுமி, தனது மூன்று மாத ஆண்குழந்தையை விட்டு விட்டு, தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இந்நிலையில், இந்த குழந்தையை சின்னப்பையனின் முதல் மனைவி, இவரது தந்தைஆகியோர் சேர்ந்து கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தையின் உடலைதென்னந்தோப்பிலேயே புதைத்து விட்டனர்.
இந்த தகவலை அறிந்த மாகாலட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆர்.டி. ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து,குழந்தையின் பிணம் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications