மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய தொழிற்சாலைக்கு சீல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய சாயத் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.மேலும் 20 சாயத் தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பனியன் வர்த்தக நகரமான திருப்பூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சாயத்தொழிற்சாலைகளினால் சுற்றுச் சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டது.

இதனால் இங்குள்ள சாயத் தொழிற்சாலைகள் பொதுவான சுத்தகரிப்பு நிலையம்ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமேவெளியேற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து பலஇடங்களில் சுத்தகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

பல சாயத் தொழிற்சாலைகள் ஒன்றாக இணைந்து கூட்டாக ஒரு பொது சுத்திகரிப்புநிலையத்தை ஏற்படுத்தின. இதற்கு அரசு மானியம் வழங்கியது.

இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தை முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதுபற்றி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் செட்டிபாளையம் என்ற இடத்தில் ஒரு சாயத் தொழிற்சாலையில்,பொது சுத்திகரிப்பு நிலையத்தைப் பயன்படுத்தாமல், கழிவு நீரை நேரடியாகவெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலைக்குஅதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதேபோல அனுப்பர்பாளையம், முருகம்பாளையம், காசிபாளையம், சின்னக்கரைஆகிய இடங்களுக்குச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில்பல சாயத் தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்பட்டுவந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக 20 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு மாசுக் கட்டுப்பாட்டுஅதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+