சட்டசபைத் தேர்தல்: திமுக கூட்டணியில் பா.ஜ.க தொடரும்
கோவை:
தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி தொடரும் எனபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் கூறினார்.
கோவை காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப மையத்தை பங்காருலட்சுமணன் திறந்து வைத்தார். இவர் பா.ஜ.,தலைவரான பிறகு தமிழகத்தில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.
சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஒரு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் பா.ஜ.க. தலைவர் கலந்து கொண்டதுஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விழா முடிந்த பின் நிருபர்களிடம் லட்சுமணன் கூறுகையில்,
பாரதீய ஜனதாக் கட்சியை மதவாதக் கட்சி, இனவாதக் கட்சி என்றெல்லாம் எதிர்க் கட்சிகள் கடும் புகார்கூறிவந்தன. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் இதனை முறியடித்து, எதிர்க் கட்சிகளின் புகார்கள்அனைத்து அவதுறாகச் சொல்லப்பட்டவை என பா.ஜ.க. நிரூபித்துள்ளது.
கிறிஸ்துவ மதம் பற்றி பிரச்னைக்குரிய கருத்துக்களை புத்தகமாக எழுதியதால், அருண்ஷோரியை அமைச்சர்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அருண்ஷோரி நல்ல எழுத்தாளர். அவர்அமைச்சராவதற்கு முன்பு இந்தப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதில் சிவ சேனாவுடன் பா.ஜ.கவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனக்கூறப்படுவது தவறு. இந்த கருத்தை சிவ சேனா தவறாகப் புரிந்து கொண்டது என்று தான் கூற வேண்டும். இதுகுறித்து நான் உரிய விளக்கம் அளித்து விட்டேன்.
தமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி தொடரும்.
பா.ஜ.க. ஆட்சியில் தான் இந்தியாவின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. சர்வதேச நாடுகளின்பார்வை இந்தியாவின் மீது உள்ளது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் அதிக வல்லுநர்களை உலக நாடுகளுக்குஅளித்து வருகிறோம்.
வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்லாமல், வளர்ச்சி பெற்ற ஜெர்மன் போன்ற நாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பவல்லுநிர்களையே விரும்புகின்றன. இந்தக் கல்லூரியில் அமைக்கப்படவிருக்கும் சாஃப்ட்வேர் மற்றும்தொழில்நுட்ப மையம் வருங்காலத்தில், உலக அளவில் க்கியத்துவம் பெறும் என்றார்.
விழாவில் காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் பால் தினகரன் பேசுகையில்,
சாஃப்ட்வேர் தகவல் தொழில்நுட்ப மையம் 5 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இதில் இரண்டு கோடி ரூபாய்கட்டடங்களுக்குச் செலவிடப்படுகிறது. பங்காரு லட்சுமணன், சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார். அவரது பணி பாராட்டத்தக்கது என்றார்.
பின்னர், விழா முடிவில் டி.ஜி. எஸ்.,தினகரன், தெலுங்கு மொழியில் கிறிஸ்துவ முறைப்படி , பங்காருலட்சுமணனுக்காக பிரார்த்தனை செய்தார்.












Click it and Unblock the Notifications