பிரதமரின் அறுவை சிகிச்சைக்குக் காத்திருக்கும் காஸ், மண்ணெண்ணெய் விலை!
டெல்லி:
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வை குறைப்பது குறித்த முடிவெடுப்பதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக விலையைக் குறைக்க 3 நாட்கள் நிபந்தனை விதித்திருந்தார் மத்திய அமைச்சரவையிலிருந்துராஜினாமா செய்த மம்தா பானர்ஜி. ஆனால், பிரதமர் தனது மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் இதுகுறித்து முடிவெடுப்பார் என மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறினார்.
இதன்மூலம் மம்தாவின் நிபந்தனையை பிரதமர் புறக்கணித்துள்ளார். மண்ணெண்ணெய், சமையல் காஸ்ஆகியவற்றின் விலை உயர்வால் ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி மம்தா பானர்ஜி தனதுரயில்வே அமைச்சர் பதவியை விட்டு விலகினார். தனது கட்சியைச் சேர்ந்த அஜித் பாஞ்சாவையும்வெளியுறவுத்துறை இணையமைச்சர் பொறுப்பிலிருந்து விலகச் செய்தார். தன்னிடம் உள்ள 9 எம்.பிக்களும் இனிபா.ஜ.கவுக்கு வெளியில் இருந்து தான் ஆதரவளிப்பர் என்றார்.
இதையடுத்து அவரிடம் மத்திய அரசு பேச்சு நடத்தியது. மண்ணெண்ணெய், சமையல் காஸின் விலையைக்குறைக்க செவ்வாய்க்கிழமை வரை மம்தா நிபந்தனை விதித்தார். பின்னர் மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்காகவெள்ளிக்கிழமை வரை தனது நிபந்தனையை நீட்டித்தார்.
இந் நிலையில் பெட்ரோலிய விலை மறுபரிசீலனை குறித்து அறுவை சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பிய பின்னர்தான் யோசிப்பேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதனை மம்தா பானர்ஜியிடம் பிரதமரே தொலைபேசியில் தெரிவித்தார் என பிரமோத் மகாஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications