மோசடி வாக்காளர் அட்டை வைத்திருந்தால் சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாக்காளர் அடையாள அட்டையில் மோசடி செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சாரங்கி எச்சரித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் அடையாள அட்டை வழங்கும பணி இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது.இதுவரை 56 சதவீத வாக்காளர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களில் இப்பணி முழுமையாக முடிவடைந்துவிட்டது. தமிழகம் முழுவதும் நவம்பர்இறுதிக்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு விடும்.

யாரேனும் தவறானதகவல் கொடுத்து போலி அடையாள அட்டை பெற்றிருந்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனைஅல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

சென்னை சைதாப்பேட்டையில் 15 ஆயிரம் பேருக்கு போலி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக வந்த புகார்தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இம்முறை முழுக்க முழுக்க அடையாள அட்டை அடிப்படையில் தான் தேர்தல் நடைபெறும். அடையாள அட்டைஇல்லாவிட்டால் ஓட்டு போட முடியாது. திருச்சி லோக்சபா இடைத்தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் நடைபெறும் என்றார்அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+