எங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் ..கேட்கிறார் ஆர்.எம்.வீ.
சென்னை:
எம்.ஜி.ஆர். கழகத்திற்கும் மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று முன்னாள்அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழக தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எம்.வீரப்பன்பேசுகையில், தனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு வருத்தப்பட்டுள்ளார். அதே சமயம்எம்.ஜி.ஆர். கழகத்திற்கும் அமைச்சர் கொடுக்கப்படவில்லை என்றும் அவர்கூறியிருக்கலாம்.
எம்.ஜி.ஆர். கழகம், ஜெயலலிதாவின் கொள்கைகள், நடைமுறைகளை தீவிரமாகஎதிர்க்கும் ஒரு கட்சி. அந்த்க கொள்கையில் பெரிய திருப்பத்தையேஏற்படுத்தியவர்கள் நாங்கள். எனவே மத்தியில் அமைச்சர் பதவி என்றால்எங்களுக்குத்தான் முதலில் கொடுக்கப்பட வேண்டும்.
அடுத்த முறை மத்திய அமைச்சரவை மாற்றத்தில் எம்.ஜி.ஆர். கழக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்றார் வீரப்பன்.












Click it and Unblock the Notifications