மேட்ச் பிக்ஸிங்: கிங் கமிஷன் விசாரணை நவம்பர் வரை ஒத்திவைப்பு
கேப்டவுன்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் கிங் கமிஷன்விசாரணை நவம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹான்ஸி குரோனியே,கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் சேர்ந்து மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், ஒரு கிரிக்கெட் சூதாட்டக்காரரிடம் குரோனியே தொலைபேசியில் பேசியதைடெல்லி போலீஸார் பதிவு செய்தனர். இதையடுத்து குரோனியே மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணி நாடு திரும்பியதும், இந்த மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணைநடத்த எட்வர்ட் கிங் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்வாரியம் நியமித்தது.
இந் நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் குரோனியேநீக்கப்பட்டார். அவரிடம் கிங் கமிஷன் அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தினர்.
இந் நிலையில், மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும்தொடர்பு உள்ளது என்றும், என்னிடம் கிரிக்கெட் சூதாட்டக்காரரை அறிமுகப்படுத்தியதேஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்தான் என்றும் குரோனியே தெரிவித்தார்.
இதையடுத்து மேட்ச் பிக்ஸிங் பற்றி இந்தியாவில் விசாரணை நடத்த கிங் கமிஷன் முடிவுசெய்தது. தென் ஆப்பிரிக்க அரசிடம் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்முன்இந்தியாவில் விசாரணை நடத்துவதற்காக ஷாமிலா பதோஹி என்பரை கிங் கமிஷன்அனுப்பியது.
ஒரு வாரம் இந்தியாவில் தங்கியிருந்து கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், டெல்லி போலீஸ்அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்துடன் பதோஹிவருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்த வகையில் எந்த வாக்குமூலத்தையோ, விசாரணைக்குத் தேவையானமுக்கிய தகவல்களையோ அவர் எடுத்து வரவில்லை. இதையடுத்து தனது விசாரணையைநவம்பர் மாதத்துக்கு கிங் கமிஷன் ஒத்தி வைத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications