ஜாதிக் கட்சிகள்: குழப்பும் மூப்பனார்
காஞ்சிபுரம்:
ஜாதிக் கட்சிகளின் வளர்ச்சி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் குழப்பமான பதிலைத் தந்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜாதிக் கட்சிகள் வளர்ந்து வருவதையும், அவர்களது யூகம் என்ன என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ராமதாஸ் முதலில் பாமகவை ஜாதிக் கட்சியாகத்தான் மாற்றினார். அவர்கள் வளர்ந்திருக்கிறார்களே? ஆகவே, எதையும் பொருத்திருந்துதான்பார்க்கவேண்டும்.
திமுகவைப் பற்றி ராமதாஸ் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். அது அவரது சொந்த கருத்து. அது பற்றி கருத்து சொல்ல ஏதுமில்லை.
எங்கள் அணிக்கு ராமதாஸ் வருவாரா என்பதை நான் சொல்லமுடியாது. இப்போது அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும்இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் அங்கேயே இருக்கட்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை தமிழகம் முழுவதும் தமாகா மேற்கொண்டுள்ளது. 11-ம் தேதி இப்பணி முடிந்ததும் ஆளுநரின் மனு கொடுக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க அனைத்து வகையிலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம்என்பதைவிட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்துள்ளன என்பதே முக்கியம்.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மத்தியில் இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications