யானைகளைக் கொன்ற 2 பேர் கைது
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் யானைகளைக் கொன்று தந்த வேட்டையில் ஈடுபட்ட இரண்டுபேரைப் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் யானைகளைக் கொன்று தந்த வேட்டையில் ஒருகும்பல் ஈடுபட்டு வந்தது. இதில் வீரப்பன் கும்பல் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தில்வனத்துறையினர் இரவு நேரக் காவலில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர்யானைகளைத் தேடி துப்பாக்கியுடன் நடமாடியதைக் கண்டு பிடித்து கைது செய்தனர்.
இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்யானை ஒன்று கொல்லப்பட்டுதந்தங்கள் எடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், முதுமலைக் காட்டுப்பகுதியில் தொடர்ந்து யானை வேட்டை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்துவனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இதே பகுதியைச் சேர்ந்த இருவர், வனப் பகுதியில் யானைகளைக் கொல்லவெடி மருந்துகளுடன் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மச்சக் கொல்லி என்றஇடத்தைச் சேர்ந்த வாசு (47) இதில் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
வாசுவிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications