ஏன் பெட்ரொல் விலையை உயர்த்தினோம்? பா.ஜ.க. விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

பொறுப்பான எதிர்க் கட்சிகள், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அரசியலாக்கக் கூடாது எனகோவையில் நடந்த பாரதிய ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. பொறுப்பான எதிர்க் கட்சிகள்இந்த விலை உயர்வை அரசியலாக்கக் கூடாது. நாட்டின் நலன் கருதியே இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பயன்பாட்டில் 70 சதவீத எரிபொருள் தேவை இறக்குமதி மூலமே சரிகட்டப்படுகிறது. சர்வதேச அளவில்பெட்ரோலிய கச்சா எண்ணெய் டன் ஒன்றுக்கு 3,313 டாலரிலிருந்து 12,000 டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த 1999-2000ம் ஆண்டில் 53,500 கோடியாக இருந்த இறக்குமதி மதிப்பு, 2000-01ம் ஆண்டில், 80,000கோடியாக உயர்கிறது. இதனால் 23,600 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கடந்த நரசிம்மராவ் ஆட்சி காலத்தில், இத்தகைய நெருக்கடியை சமாளிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக்கமிட்டி தான் தற்போதும் இந்த விலை உயர்விற்குப் பரிந்துரை செய்துள்ளது. இதனைத் தான் பா.ஜ அரசுஅமல்படுத்துகிறது என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டவை. தற்போது ஊழல்கட்சிகள் எனக் கூறப்பட்ட அ.தி.மு.க., த.மா.கா., காங்கிரஸ் போன்றவை ஓரணியில் திரண்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக இந்த அணியை எதிர்த்து போட்டியிட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமை காக்கவேண்டும்.

தமிழகத்திற்கு சேது சமுத்திரத்திட்டம், புதிய ரயில்வே திட்டங்கள், கோவை- திண்டுக்கல் அகல ரயில்பாதை,திருப்பூர்- சாம்நகர் ரயில் திட்டம் போன்றவற்றை அளித்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் இக் கூட்டம்நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள கோயில்களை பரமாரிக்கும் பணி, உண்டியல் வசூல் மூலம் செலவிட்டுக் கொள்ள கோயில்அறக்கட்டளைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். கோயில் நிர்வாகப் பொறுப்புகளை அறங்காவலர்களிடேமேஅளிக்க வேண்டும்.

பசுக்களை பாதுகாக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆனைமலையாறு, நல்லாறு ஆகியவற்றிலிருந்து கூடுதல் தண்ணீர் பெறவேண்டும். இதன் மூலம் பொள்ளாச்சி ஆயக்கட்டுப் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் போன்றதீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் அகில இந்திய பா.ஜ., தலைவர் பங்காரு லட்சுமணன், தமிழக பா.ஜ.க. தலைவர்கிருபாநிதி, பொதுச் செயலர் இல.கணேசன் , எச்.ராஜா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+