ராஜ்குமாருக்கு ராகவேந்திரர் படம் கொடுத்தனுப்பிய ரஜினி
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், அரசு தூதர் நககீரன் கோபால் மூலம் கொடுத்ததனுப்பியராகவேந்திரர் படம் வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர் ராஜகுமாரிடம்கொடுக்கப்பட்டது.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் உட்பட்ட நான்குபேரில் ஒருவரான துணை இயக்குனர் வீரப்பனிடமிருந்து தப்பி வந்து விட்டார்.
அதனால் ராஜ்குமார் கவலையுற்று சாப்பிடாமல் இருந்தார். அவரை சமாதானப்படுததிசாப்பிட வைத்து, அவரிடம் ரஜினிகாந்த் கொடுத்தனுப்பிய ராகேவேந்திரர் படத்தையும்கொடுத்ததாக அரசு தூதர் நக்கீரன் கோபால் கூறியிருக்கிறார். இது பற்றி அவர் மேலும்கூறியதாவது:
தப்பி சென்ற நாகப்பா உயிருடன் சென்றிருப்பாரா அல்லது காட்டில் உள்ளவிலங்குகளால் அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமா என்பது குறித்துகவலையாக இருந்தது.
இந் நிலையில் நாகப்பாவைத் தேடிச் சென்றவர்கள் அவரைக் கண்டு பிடித்தால்அவரைக் கொன்று தலையை மட்டும் கொண்டு வருவார்கள் என்ற அச்சத்தில்இருந்தேன். ஆனால் அவரைத் தேடிச் சென்றவர்கள் நாகப்பாவைக் கண்டுபிடிக்காமல்வெறும் கையுடன் தான் திரும்பி வந்தார்கள்.
வீரப்பனுடன் இருந்தவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல தயாராக இருந்தனர்.சாப்பாடும் தயாராக இருந்தது. ராஜ்குமார் பசியில்லை என்ற போது அங்கு வந்தமாறன், நாகப்பா தப்பியதை மறந்து சாப்பிடுங்கள் என்றான். அதற்கு ராஜ்குமார்,வியாழக்கிழமை விரதம். எனவே மாலையில் சாப்பிடுகிறேன் எனக் கூறினார்.
இருப்பினும், வீரப்பன் வேறு இடத்துக்கு நடந்து செல்ல வேண்டும். எனவேசாப்பிடுங்கள் என வற்புறுத்தினான். நானும் அவரை சமாதானப்படுத்தி நடிகர்ரஜினிகாந்த் கொடுத்தனுப்பிய ராகவேந்திரர் படத்தை கொடுத்து அவரை சாப்பிடவைத்தேன்.
பிறகு, நான் கிளம்புகிறேன் என்று கூறினேன். அதற்கு வீரப்பன், நாங்கள் செல்லும்இடத்திற்கு வந்து விட்டு நீ போகலாம் என்றான். அதறகு, இல்லை. நாகப்பாதப்பியிருக்கும் இந்த நிலையில், நான் தொடர்ந்து காட்டிற்குள் இருந்தால், என்னையும்நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள் என்று சந்தேகப்படுவார்கள். எனவே கிளம்புகிறேன்என்றேன்.
இதையடுத்து நான் கிளம்ப அனுமதி கொடுத்த வீரப்பன், காட்டிற்குள் அதிரடிப்படைவந்தால் ரோட்டில் தலைகள் தான் கிடக்கும் என மிரட்டலாகக் கூறினான் என்றுகோபால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications