"மூலிகை பெட்ரோல் ராமர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மூலிகை பெட்ரோல் தயாரித்ததாகக் கூறி கைதான ராமர் பிள்ளை மீது புதன்கிழமை சி.பி.ஐ.போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமானவர் ராமர் பிள்ளை.ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்டம் அருகே அமைந்துள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்த இவர்தமிழ்தேவி மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் சென்னையில் பெட்ரோல் தயாரித்துவிற்றார்.

"மூலிகை விஞ்ஞானி என அழைக்கப்பட்ட ராமர் பிள்ளை, திடீர் வி.ஐ.பி. ஆனார். தனதுமூலிகை பெட்ரோலை சென்னை, ஐதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் முக்கியபிரமுகர்கள் முன்னிலையில் சோதனை செய்து காண்பித்தார். மூலிகை பெட்ரோலைசினிமா நடிகர் நடிகைகள் அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் திடீரென சி.பி.ஐ. போலீசார் கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி ராமர் பிள்ளைமீது வழக்கு பதிவு செய்தனர். 10-ம் தேதி ராமர் பிள்ளை, பெட்ரோல் தயாரித்ததொழிற்சாலை மற்றும் அவரோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள் உள்ளிட்டோரின் 15இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதே நாள் இரவு ராமர் பிள்ளை கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், ராமர் பிள்ளை மீது புதன்கிழமை சென்னை எழும்பூர் 10-வதுமெட்ரோபாலிடன் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2000 பக்கம்கொண்டது இந்த குற்றப்பத்திரிக்கை. மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணமூர்த்தி வழக்குவிசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

குற்றப்பத்திரிக்கையுடன் 286 முக்கிய ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. முன்னாள்மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், ஆயில் நிறுவன விஞ்ஞானிகள், வங்கிஅதிகாரிகள் உள்ளிட்ட 212 பேர் சி.பி.ஐ. சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராமர் பிள்ளை மீது இ.பி.கோ. 420 (மோசடி), சதித்திட்டம் மற்றும் அத்தியாவசியபொருட்கள் சட்டப்பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். ராமர் பிள்ளையுடன் 5பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலுக்கு உரிமை தருவதாக கூறி 60 பேரிடம் 2.27 கோடி பெற்றும் ராமர் பிள்ளைமோசடி செய்துள்ளார்

ராமர்பிள்ளையின் வளர்ப்பு தாய் வேணுதேவி, கோவை மாவட்டம் திருப்பூரில் உள்ளதுணிக்கடை வியாபாரி சின்னச்சாமி, கோலை சூலூரைச் சேர்ந்தராஜசேகரன்,சென்னையைச் சேர்ந்த பரத் ஆகியோர் மற்ற நால்வர். இவர்களும்மோசடியில் ஈடுபட்டவர்கள்.

ராமர் பிள்ளை பெட்ரோல் தயாரிக்க ஐஎஸ்ஐ சான்றிதழ் பெறவில்லை. அவர்பென்சீன்,டொயிலூயின், நாப்தா என்ற பெட்ரோலிய ரசாயன பொருட்கள் கலந்தகலவையை உபயோகப்படுத்தி பெட்ரோல் தயாரித்துள்ளார். இது பெட்ரோல்தயாரிக்கப்படுத்தப்படும் கலவையல்ல.

இந்த பெட்ரோலை உபயோகப்படுத்தி வரும் வாகனங்களிலிருந்து வரும் புகை உயிருக்குஆபத்தானது. இதன் மூலம் புற்று நோய் வரும் அபாயம் உள்ளது என சி.பி.ஐ. உயர்அதிகாரி தெரிவித்தார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+