வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்த அரிசி மூட்டைகள் பறிமுதல்
காஞ்சிபுரம்:
அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசிமூட்டைகளை அதிகாரிகள்கைப்பற்றினார்கள்.
அரிசி மூட்டைகளுடன் ஏழு லாரிகளும் கைப்பற்றப்பட்டன. காஞ்சிபுரம் அருகே பழஞ்சூர் கிராமம் உள்ளது. இங்கு அரிசி பதுக்கிவைத்துள்ளதாகஅதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் சுகுமாரன் உத்தரவில் ஆர்.டி.ஓ சங்கரன் மேற்பார்வையில் பறக்கும்படை அதிகாரிகள் அந்த இடத்தை அதிரடியாக சோதனைநடத்தினார்கள்.
அப்பொழுது அங்கே அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக 398 மெட்ரிக் டன் அரிசிகண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 7,957 மூட்டைகள் கைபற்றப்பட்டுள்ளன.
இந்த அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருந்த ஏழு லாரிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். அரிசியின் மதிப்பு மொத்தம் ரூ. 51,74,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட அரிசியை எந்தந்த நாடுகளுக்கு கடத்த இருந்தார்கள் என்ற விபரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர். மாவட்ட வழங்கல்அதிகாரி ஜெயராமன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications