ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை
வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழாவில் எட்டாவது நாள் வெள்ளிக்கிழமையன்று (06.10.2000) சரஸ்வதி பூஜையாகவும், ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை தினத்தன்று கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள கருவிகளுக்கும், பொருட்களுக்கும் பூஜை நடத்துவர்.
வீட்டில் கல்வி கற்கும் அனைவரும் தங்கள் பாட புத்தகங்களுக்கு பூஜை செய்வார்கள். இது கலைகளின் அரசி, கலைமகள், சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்துஅவளது ஆசிகளை மேலும் பெறுவதற்கு பிரார்த்தனை செய்யும் தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டி வீடு அலங்கரிக்கப்படும். வீடு முழுவதும் மாக்கோலமிடப்படும். வீட்டில் சரஸ்வதி படம்வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
கோவிலுள்ள சரஸ்வதி சன்னிதியிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். முந்தைய நாட்களில் பூஜை செய்யாதவர்கள் இன்று பூஜை செய்தால் ஏழு நாட்கள் பூஜைசெய்ததற்கான பலனை பெறலாம்.












Click it and Unblock the Notifications