விக்கிரமசிங்கேவுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார் பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும்பாதுகாப்பு அளிக்கும் படி விடுதலைப் புலிகளுக்கு அதன் தலைவர் பிரபாகரன்உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றத்துக்கு இம்மாதம் 10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தவிர மற்றகூட்டங்களில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தேசிய ஐக்கிய கூட்டணியில் உள்ளதமிழ் மற்றும் முஸலிம் வேட்பாளர்களை தாக்கி வருகிறார்கள். தாக்குதலுக்கு பயந்துஅதிபர் சந்திரிகா வீட்டில் இருந்தபடியே வானொலி முலமும் தொலைக்காட்சி மூலமும்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

விடுதலைப் புலிகளின் இந்த தாக்குதல் இது முஸ்லிம் மற்றும் தமிழர்களை ஐக்கியதேசிய கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் முயற்சி என கருதப்படுகிறது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகணங்களில் ஐக்கியதேசிய கட்சி நடத்தும் தேர்தல் பிராசாரக் கூட்டத்துக்கும், அக் கடசித் தலைவர் ரணில்விக்கிரம சிஙகே பங்கேற்கும் கூட்டத்துக்கும் பாதுகாப்பு அளிக்கும் படி விடுதலைப்புலிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுவரை தேர்தல் தொடர்பாக விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுதாக்குதலுக்கு 2 வேட்பாளர் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+