"ராமதாஸை அரசியலை விட்டே விரட்ட வேண்டும்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
ராமதாஸை அரசியலில் இருந்து விரட்டினால்தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீரடையும்.
புதுவையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய வன்முறையைக் கண்டித்து வரும் 9-ம் தேதி புதுவையில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தஇருந்தோம்.
ஆனால், அவற்றை புதுவை முதல்வர் சண்முகத்தின் வேண்டுகோளை அடுத்து ஒத்தி வைத்துள்ளோம்.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 11-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேர்தல் நெருங்க, நெருங்க ராமதாஸ் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல்பேசுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மீது குற்றச்சாட்டுகளை அவர் அள்ளி வீசி வருகிறார்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிடுவார் என்று ராமதாஸ் எதிர்பார்த்தார். மேலும், ஜெயலலிதாவின்இரக்கத்தை எதிர்பார்த்து கருணாநிதியைத் தாக்கிப் பேசி வருகிறார்.
இப்போது எங்கு இருக்கிறோம் என்று ராமதாஸுக்கே தெரியவில்லை. இனி கருணாநிதியும் அவரைச் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை. அதிமுகவின்கதவும் அடைக்கப்பட்டுவிட்டது.
விழுப்புரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நான்தான் வரச் சொன்னதாக ராமதாஸ் கூறியுள்ளார். இது ஜனநாயகவிரோதச் செயல்.
ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி டிஜிபியிடம் விரைவில் மனு கொடுக்கப்படும். அரசியலில் இருந்து ராமதாஸ் விரட்டப்பட்டால்தான்தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்படும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications