பழிக்குப் பழி: வெடிகுண்டு வீசி டீக்கடைக்காரர் கொலை
சங்கரன்கோவில்:
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெடிகுண்டு வீசி ஒருவர்கொல்லப்பட்டார்.
சங்கரன்கோவிலையடுத்த இருமங்குளத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. வடக்கு புதூர்என்ற இடத்தில் இவர் டீக்கடை நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவுமருதுபாண்டி கடையை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
மருதுபாண்டி கிளம்பிய சமயத்தில் அவரது நண்பர்கள் சிலர் அங்கு வந்தனர்.மருதுபாண்டியைத் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கிளில் கூட்டிச்சென்றனர்.
சங்கரன் கோவில் ரயில்வே கேட் அருகில் வந்தபோது, ஒரு கும்பல் இவர்கள் மீதுவெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒரு குண்டு வெடித்ததில், மருதுபாண்டி உடல் சிதறிஇறந்தார். அவருடன் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.
வெடிகுண்டு வீசி டீக்கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் சங்கரன் கோவில் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குருசாமிகொலை வழக்கில் மருதுபாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.இந்தநிலையில், அவர் பழி வாங்கும் நோக்கத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுபோலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications