திருமலை பிரம்மோற்சவம் 6-வது நாள்
திருமலை பிரம்மோற்சவத்தில் வியாழக்கிழமை 6-வது நாள் விழா நடைபெறுகிறது.
இன்றுகாலை 9 மணி முதல் 11 மணி வரை ஹனுமான் வாகனத்தில் எம்பெருமாள் எழுந்தருளிார். ராமாதவராத்தில் ராமபக்தனாக இருந்து ராவணனுடனான் போரில் துணை நின்று சீதையை மீட்க உதவியவர் ஹனுமான். பெருமாள் ஹனுமான் வாகனத்தில் வலம் வருவது இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதக் காட்சியாகும்.
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ரத ரங்க டோலோத்சவம் நடை பெறுகிறது.
இரவு 9 மணி முதல் 11மணி வரை திருவேங்கடத்தான் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பெருமாளின் அவருக்கு உரிய வாகனமான கருட வாகனத்தில் வருவது சிறப்பாகும். கருடவாகனத்தில் பெருமாள் வருவதை தரிசித்தால் நாம் செய்த பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பின் பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சர்வ தரிசனம் நடைபெறுகிறது.
இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பூலங்கி சர்வ தரிசனம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications