அமெரிக்காவில் வாதாட செல்லும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள்
சென்னை:
அமெரிக்காவில் நடக்க இருக்கும் சர்வதேச சுற்றுப்புறச் சூழல் சட்டம் குறித்த மாதிரி (மாடல்) நீதிமன்றத்தில் கலந்து கொண்டுவாதாடுவதற்காக சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள ஸ்டெட்சன் பல்கலைக்கழகத்தில் வரும் 26-ம் தேதி, சுற்றுப்புறச் சூழல் சட்டம் குறித்தமாதிரி நீதி மன்றம் நடக்கிறது. ஆண்டு தோறும் நடக்கும் இந்த மாதிரி நீதிமன்றத்தில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளில்இருந்தும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவர்கள் மாதிரி நீதிமன்றத்தில் கலந்து கொண்டு தங்கள் வாதத்தை எடுத்து வைப்பர். மாணவர்கள் எடுத்து வைக்கும்வாதங்களை நீதிபதிகள் விசாரிப்பார்கள். சாதாரணமாக நீதிமன்றங்களில் நடப்பது போல் வாதி, பிரதிவாதங்கள் நடைபெறும்.
இந்த மாதிரி நீதிமன்றத்தில் கலந்து கொள்ள மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்வு சென்னையில் நடந்தது. இத் தேர்வில்சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஜி.வி ஆனந்த் பூஷன், கே.எம்.ஆசிம் செஷாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு இப்பொழுது தான் தமிழகம் சார்பில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆனந்த் பூஷனின் தந்தை கேப்டன் ஜி.என்.வெங்கட் ராஜாராம். இவரது தாத்தா ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிவேணுகோபால். மாதிரி நீதிமன்றத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லும் மாணவர்கள் ஆனந்த் பூஷன், ஆசிம் செஷாத்இருவரையும் அம்பேத்கார் சட்டக் கல்லூரியின் முதல்வர் ராபின், மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications