தாதா சோட்டா ராஜனை கைது செய்தது தாய்லாந்து
பாங்காக்: மும்பையின் மிகப் பெரிய தாதாவான சோட்டா ராஜனை தாய்லாந்து போலீசார் கைதுசெய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சோட்டா ராஜனை, மற்றொரு ரெளடியான தாவூத்இப்ராகிமின் கும்பல் சுட்டது. இதில் உயிர் பிழைத்தார் ராஜன். இவர் மீது தாய்லாந்தில்எந்த வழக்குகளும் இல்லாததால், அவர் இந்தியா திரும்புவதில் எந்தப் பிரச்சனையும்இருக்காது என முதலில் கூறப்பட்டது.
ஆனால், இப்போது போலி பாஸ்போர்ட் மூலம் நுழைந்ததாக தாய்லாந்துபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், ஆயுத கடத்தல், கொலை,கொள்ளை போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் சோட்டாராஜன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகும் இந்தியாவில்உள்ள தனது ஆட்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அவர்.
இந் நிலையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்,மற்றொரு மும்பை தாதாவான தாவூத் இப்ராஹிம் குழுவினரால் சோட்டா ராஜன்சுடப்பட்டார்.
தற்போது அவர் பாங்காக் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், போலி பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்துக்கு வந்து தங்கியுள்ளதாக அவரைஅந் நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி தாய்லாந்து நாட்டு குடியேற்றப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமராஜ் தீராதாய்கூறியதாவது:
துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோட்டாராஜனை நாங்கள் கண்காணித்து வந்தார். மும்பையிலிருந்து பாங்காக் வந்த 3 பேர்கொண்ட போலீஸ் குழு, சோட்டா ராஜனின் பாஸ்போர்டைச் சோதனை செய்தது.
அப்போது அந்த பாஸ்போர்ட் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்துசோட்டா ராஜனை நாங்கள் கைது செய்தோம். போலி பாஸ்போர்ட் மூலம்சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்ததாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளோம்.
இந்த வழக்கு முடியும் வரை சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம்.இந்தியாவில் அவர் மீது பல வழக்குகள் உள்ளன என்றாலும், வழக்கு விசாரணைமுடிந்த பிறகே அவரை இந்தியாவுக்கு அனுப்புவோம் என்ரார் தீராதாய்.
தொடர்பான செய்திகள்:
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications