ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது இந்தியா
நைரோபி:
ஐ.சி.சி. நாக்அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரில் உலக சாம்பியன்ஆஸ்திரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்த அரையிறுதிக்குத்தகுதி பெற்றது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஐ.சி.சி. நாக்அவுட் கிரிக்கெட்போட்டி தற்போது கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கால் இறுதிப் போட்டியில் இந்தியாவும், உலகசாம்பியன் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தியா தனது முதல் போட்டியில்கென்யாவைத் தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தது.
ஆனால், உலகக் கோப்பையை வென்றதை அடுத்து அரையிறுதியில் நேரடியாகவிளையாட ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில்ஆஸ்திரேலியா டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யும்படி கூறியது.
இதையடுத்து இந்திய அணியின் டெண்டுல்கர், கங்குலி இருவரும் களமிறங்கினர்.டெண்டுல்கர் அதிரடி ஆட்டம் ஆடினார். ஆனால், 38 ரன்கள் எடுத்த நிலையில்அவுட்டானார்.
அடுத்து வந்த திராவிடும் விரைவில் அவுட்டானார். அடுத்த ஆட வந்தவர்களில்யுவராஜ் சிங் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தனதுஇரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடிய யுவராஜ் சிங் சிறப்பாகஆடினார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துக்களை அவர் நான்கு பக்கமும் சிதறிடித்துரன்கள் குவித்தார். அவர் 84 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணியில் ஷேன் லீ, பிரெட் லீ, கில்லெஸ்பி ஆகியோர் தலா இருவிக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்கமே அதற்குசரிவாக இருந்தது. 7 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வாவ் அவுட்டானார்.
ஆனால், அடுத்து வந்தவர்கள் ஓரளவு நின்று ஆடி ரன்கள் குவித்தனர். ஒரு நேரத்தில்ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற ஏற்பட்டது.
தொடக்க ஆட்டக்காரர் கில்கிறைஸ்டுடன் சேர்ந்து அடுத்த வந்த ஹார்வி, பான்டிங்,பேவன், ஸ்டீவ் வாவ் ஆகியோரும் ஓரளவு ரன்கள் குவித்தனர்.
ஆனால் தொடர் இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருந்தது. இந்தியவீரர்களின் பீல்டிங்கும், பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது.
கடைசியில் 47 ஓவரில் 245 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது.தையடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அகார்கர், ஸாகிர் கான் ஆகியோர் தலா இரு விதகெட்டுகளைவீழ்த்தினர்.
84 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் ஒரு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட்டுகளைச்செய்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா அடுத்து அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும்இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 11-ம் தேதி மோதுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications