போபர்ஸ்: ஹிந்துஜா சகோதர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
டெல்லி:
ரூ.64 கோடி ரூபாய் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர்களானஹிந்துஜா சகோதரர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிபதி அஜித் பரிஹோக்கேயிடம் இந்த 11 பக்க துணைக்குற்றப்பத்திரிக்கையை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ திங்கள்கிழமை தாக்கல்செய்தது.
1986-ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனிடமிருந்து ரூ.1437 கோடி ரூபாய்மதிப்புள்ள போபர்ஸ் பீரங்கிகள் வாங்கப்பட்டன. இந்த பீரங்கி பேரத்தில் ரூ. 64 கோடிஊழல் நடந்ததாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் பீரங்கிகளை சப்ளை செய்த ஏ.பி. போபர்ஸ் நிறுவனத்திடமிருந்துகமிஷன் பெற்றதாக வெளிநாட்டில் வசிக்கும் இந்திய தொழிலதிபர்களான ஹிந்துஜாசகோதரர்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த பீரங்கி பேர ஊழல் தொடர்பாக ஏற்கெனவே, இத்தாலி நாட்டுத் தொழிலதிபர்ஒட்டாவியோ குவாத்ரோச்சி, முன்னாள் போபர்ஸ் ஏஜென்ட் வின் சத்தா, முன்னாள்பாதுகாப்புத் துறைச் செயலர் எஸ்.கே. பட்நாகர், போபரஸ் நிறுவன முன்னாள்தலைவர் மார்ட்டின் அர்ட்போ மற்றும் போபர்ஸ் நிறுவனம் மீது சிபிஐகுற்றப்பத்திரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி மீதும் குற்றம்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மீது கூறப்படும் இந்த ஊழல் குற்றச்சாட்டை ஹிந்துஜா சகோதரர்கள்திட்டவட்டமாக மறுத்துள்ளனர். போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்த கமிஷனும்பெறவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications