கோவையில் 100 கம்ப்யூட்டர்களுடன் தகவல் தொழில்நுட்ப மையம்
கோவை:
பொறியியல் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், நூறு கம்ப்யூட்டர்வசதியுடன் ஒரு தகவல் தொழில்நுட்ப மையத்தை கோவையைச் சேர்ந்த பார்க்ஸ்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைத்துள்ளது.
இந்த மையம் மூலம் கல்லூரியில் படிக்கும் பொறியியல் துறை மாணவர்கள்பயன்பெறுவர்.
கோவையில் பார்க்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பெங்களூரைச் சேர்ந்த லூமினேயர் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஒருகம்ப்யூட்டர் மையத்தை துவக்கியுள்ளது.
இந்த மையத்தில் முதல் கட்டமாக 100 கம்ப்யூட்டர் டெர்மினல்கள் நிறுவப்படுகின்றன.இந்த டெர்மினல்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 500 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
மையம் குறித்து, லூமினேயர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவுஇயக்குநர் அன்ஜேஸ் கவுர் கூறியதாவது:
இந்த மையத்தின் மூலம் பார்க்ஸ் கல்லூரியில் படிக்கும் பொறியியல் துறைமாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். சிவில் இன்ஜினியரிங் முதல் கம்ப்யூட்டர்டெக்னாலஜி வரை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இம் மையத்தில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சாப்ட்வேர்களும்வழங்கப்படும். குறிப்பாக "கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டேடு டிசைனிங்அனைத்து மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
இது தவிர, மாணவர்களின் வசதிக்காக அதிவேக இன்டர்நெட் வசதியும்அளிக்கப்படுகிறது. நேரடியாக செயற்கைகோள்களிலிருந்து டேட்டாக்களை இறக்குமதிசெய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்டர்நெட் மூலம் மாணவர்கள், தங்களுக்குத் தேவையான தகவல்களை பெறமுடியும். மேலும், வீடியோ கான்பரன்ஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்து வருகிறோம்.மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது புதியதொழில்நுட்பங்களையும் இந்த கம்ப்யூட்டர்களில் அமைத்துத் தரப்படும்.
24 மணி நேரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கம்ப்யூட்டர் மையம்செயல்படும். இந்த மையத்திற்காக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இது போன்ற பல கம்ப்யூட்டர் மையங்களை லூமினேயர் நிறுவனம் விரைவில் பலஇடங்களில், நிறுவ உள்ளது. முதலில் தென்னிந்திய அளவிலும், பின்னர் இந்தியஅளவிலும் பல இடங்களில் நிறுவ உள்ளோம் என்றார்.
நிறுவன செயல் இயக்குநர் ஜிதேந்திரா ஷா, வர்த்தகப் பிரிவு அதிகாரி பிரமோத்கங்கோத்ரி, மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களுக்கு இந்த மையத்தின் மூலம்கிடைக்கும் பயன் குறித்தும், வர்த்தக மேம்பாடு குறித்தும் விளக்கினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications