ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது
சென்னை:
மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டான்சி நிலபேர ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாஇருவருக்கும் மொத்தம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து சென்னை தனி நீதிமன்றம்திங்கள்கிழமை தீர்ப்பு கூறியுள்ளது.
இதனால், இனிமேல் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது.
டான்சி தொடர்பாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் ஒரு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் 2 ஆண்டுசிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற எவரும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. அந்த சட்டத்தின்படிஜெயலலிதா இப்போது தேர்தலில் நிற்க முடியாது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றதில் அப்பீல் செய்தாலும், தண்டனைக்கு தடை உத்தரவு பெற்றாலும் கூடஅவரால் தேர்தலில் இனிமேல் போட்டியிட முடியாது.
ஆனால், தனி நீதிமன்றத்தின் இந்த தண்டனை செல்லாது என்று உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ தீர்ப்புவழங்கினால் மட்டுமே ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் டான்சி நிலபேர வழக்கில் ஜெயலலிதாவுகு விதிக்கப்பட்ட தண்டனை 3 ஆண்டுகள் என்பது அதிகபட்சமாகஇருந்தாலும், தனித்தனியான இரண்டு வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளதால் அவருக்கான மொத்த தண்டனை 5 ஆண்டுகள்என்றும், அதை ஏக காலத்தில் அனுபவிக்க இயலாது என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த இருதண்டனைகளையும் அவர் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு நிறுவனமான டான்சியின் நிலத்தை ஜெயலலிதாவின் ஜெயா பப்ளிகேஷன்ஸ்நிறுவனமும், சசிகலாவின் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனமும் வாங்கின. இந்த நிலத்தை தனக்குத் தானே அடிமாட்டு விலைக்குவிற்றுக் கொண்டார் ஜெயலலிதா.
அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி அரசு ஜெயலலிதா, சசிகா இருவர் மீதும் தனித்தனியே வழக்குத் தொடர்ந்தது. டான்சிவழக்கை இரண்டாகப் பிரித்து ஜெயா பப்ளிகேஷன்ஸ் மீது ஒரு வழக்கும், சசி எண்டர்பிரைசஸ் மீது மற்றொரு வழக்கும்தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றம் இதை விசாரித்தது.
ஆனால், சாட்சிகள் இரண்டு வழக்குகளுக்கும் பொதுவானவர்களாக இருந்தனர். அரசு தரப்பில் 50 சாட்சிகளும், எதிர் தரப்பில் 12சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.
இவ்வழக்கிற்கான கிரைம் நம்பர்ஸ், எப்.ஐ.ஆர், குற்றப்பத்திரிகை போன்ற எல்லா விஷயங்களும் தனித் தனியாக தாக்கல்செய்யப்பட்டன. எனவே இரண்டு வழக்குகளும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டன.
இந்திய தண்டனைச் சட்டம் 120 பி (குற்றச்சதி), 409 நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) உடன் 13 (1சி) ஆகியபிரிவுகளின் கீழ் இந்த இரு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
ஜெயலலிதாவின் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் டான்சி நிலத்தை அதன் மதிப்பை விட குறைவாக வாங்கிய குற்றத்திற்காகஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப், டான்சி முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சீனிவாசன், ஸ்பெஷல் டெபுடி கலெக்டர் நாகராஜன், முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரது இணைச் செயலாளராகஇருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் ஆகிய 6 பேர்களுக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக டான்சி நிலத்தை வாங்கிய குற்றச்சாட்டக்காக ஜெயலலிதா, சசிகலா,டி.ஆர்.சீனிவாசன், நாகராஜன், கற்பூரசுந்தரபாண்டியன் ஆகிய 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது வழக்கில் இருந்து மட்டும் முகமது ஆசீப்விடுவிக்கப்பட்டுள்ளார்.
9ம் தேதி டான்சி தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் மிகவும் பரபரப்புடன் திங்கள்கிழமை காலை தனி நீதிமன்றவட்டாரம் காணப்பட்டது. காலை 10.20 மணிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றம் வந்தனர்.
10.30 மணிக்கு தனி நீதிபதி அன்பழகன் நாற்காலியில் அமர்ந்தார். அரை மணி நேரத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார். சரியாக 11மணிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்தை விட்டு பலத்த பாதுகாப்புக்கு இடையே வெளியே வந்தனர்.
பத்திரிகையாளர்களும், டி.வி. கேமிராமேன்களும் முண்டியடிக்க வாயே திறக்காமல் கிளம்பி விட்டார் ஜெயலலிதா.
டான்சி தொடர்பான இரு வழக்குகளிலும் சேர்த்து 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவும், சசிகலாவும் அப்பீல்செய்வதற்கு வசதியாக பத்தாயிரம் ரூபாய் சொந்த ஜாமீன் அடிப்படையில் நவம்பர் 7ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்துஅவகாசம் அளித்துள்ளார் நீதிபதி அன்பழகன்.












Click it and Unblock the Notifications