சுற்றுலாத் தலமாகும் ஹைதராபாத் ஹூசேன் சாகர் ஏரி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹூசேன் சாகர் ஏரியை சுத்தப்படுத்தி அதை மிகச் சிறந்துசுற்றுலாத் தலமாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தலைநகர் ஹைதராபாத்தின் மையப்பகுதியில் உள்ளது ஹூசேன் சாகர் ஏரி. இந்த ஏரியை சுத்தப்படுத்தி,அழகுபடுத்தி அதை மக்களைக் கவரும் வகையில் அமைக்க வேண்டும் என ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது.அதன்படி, ஏரியைச் சுற்றி பூங்கா, திறந்த வெளிதிரையங்கரம், ரெஸ்டாரன்டுகள் ஆகியவை அமைக்கப்படும்.
இதுகுறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஹூசேன் சாகர் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக உயர் அதிகாரிகள் கொண்ட கமிட்டிஒன்று அமைக்கப்படும். கமிட்டியில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் இத்திட்டம் குறித்து அனைத்துநடவடிக்கைகளையும் எடுப்பார்கள். அவர்கள் மேற்பார்வையில் ஹூசேன் சாகர் ஏரி சுத்தப்படுத்தப்படும்.
நகரிலுள்ள சஞ்சீவய்யா பூங்கா மற்றும் லும்பினி பூங்காவும் விரைவில் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். இதற்கானநடவடிக்கைகளை அரசு விரைவில் எடுக்கும். இதுதவிர, ஹைடெக் நகரமான துர்கம் செரவு நகரை பொழுதுபோக்குமையமாக மாற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு அரசு தனியார் உதவியை நாடும். இந்தியா பார்க் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டைனோசர்அனிமேட்டட் பார்க் அமைக்கவும், செகந்திராபாத்தில் குடும்ப பொழுதுபோக்கு மையம் அமைக்கவும் அரசுதிட்டமிட்டுள்ளது என்றார் சந்திரபாபு நாயுடு.
ஐ.ஏ.என்.எஸ்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications