மண்ணின் மைந்தனால் 2 முறை விழா கண்ட சண்டிகர்
சண்டிகர்:
நாடு முழுவதும் தசரா விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அத்தோடு சேர்த்து மற்றொரு விழாவையும்இந்தியர்கள், குறிப்பாக சண்டிகர் நகர மக்கள் கொண்டாடினார்கள் என்றால் அது மிகையில்லை.
கென்யாவில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில்ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்த வெற்றி விழாதான் அது.
அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த அந்த மேன் ஆப் தி மேட்ச் யுவராஜ் சிங் சண்டிகரைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல் சிறப்பான ஒரு கேட்ச்மற்றும் ஒரு ரன் அவுட்டுகளைச் செய்து இந்தியாவின் வெற்றி வழிவகுத்தவர் யுவராஜ் சிங்.
தான் கலந்து கொண்ட இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே இத்தகைய சாதனையைப்புரிந்தவர் யுவராஜ் சிங்.
யுவராஜ் சிங்கின் ஆட்டம் சிறப்பாக இருந்ததை அணி கேப்டன் கங்குலியே ஒப்புக் கொண்டார். இந்திய கிரிக்கெட்ரசிகர்கள் மட்டுமல்ல யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை அகில உலக கிரிக்கெட் ரசிகர்களும் சிறப்பானது என்றுபாராட்டியுள்ளனர்.
அத்தகைய யுவராஜ் சிங் தங்களது நகரைச் சேர்ந்தவர் என்ற பெருமையில் யுவராஜ் சிங்கின் சிறப்பான ஆட்டத்தால்இந்தியா பெற்ற வெற்றியை சண்டிகர் நகர மக்கள் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
நாடு முழுவதும் மக்கள் தசரா விழாவைக் கொண்டிய வேளையில் சண்டிகர் நகர மக்கள் தசரா விழாவுடன் கிரிக்கெட்வெற்றி விழாவையும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர மக்கள் அனைவரும் வாண வேடிக்கைகளால் தங்களது மகிழச்சியைக் கொண்டாடினர். இளைஞர்கள் எல்லாம்சாலைகளுக்கு வந்து ஒருவருக்கு ஒருவர் யுவராஜ் சிங்கைப் பற்றி பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
சிட்னி ஒலிம்பிக்கில் கர்னம் மல்லேஸ்வரி பெற்ற ஒரே வெண்கலப் பதக்கத்தால் இந்தியாவே சந்தோஷப்பட்டதைப்போல் சண்டிகர் நகர மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவுக்கு அத்தகைய வெற்றியைத் தேடித் தந்ததாக நினைத்து அவர்கள்மகிழ்ந்தனர். அவர் நேரே யுவராஜ் சிங்கின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து வாழ்த்துதெரிவித்தனர்.
எனது மகன் செய்த இச் சாதனையை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானஆட்டத்தில் விளையாடச் செல்வதற்கு முன் என்னிடம் யுவராஜ் சிங் தொலைபேசியில் பேசினான். இன்று நான்நிச்சயம் சாதிப்பேன் என்றான். எல்லோருக்கும் தனது முதல் போட்டியில் சாதிக்கவேண்டும் என்பதுதான் கனவாகஇருக்கும். அந்த கனவை எது மகன் நனவாக்கிவிட்டான் என்றார் யுவராஜ் சிங்கின் தந்தை சப்னம் சிங்.
யுவராஜ் சிங் அவுட்டானதைத் தவிர வேறு எந்த தவறையும் அவர் செய்யவில்லை. அவர் ஆடியது சிறப்பான ஆட்டம்என்றார் யுவராஜ் சிங்கின் பயிற்சியாளர் சுக்வீந்தர் பாவா.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். நியுசிலாந்துக்கு எதிரான இரு டெஸ்ட்போட்டிகளில் இந்தியா சார்பில் விளையாடிவர் யோக்ராஜ் சிங்.
ஆனால், பெட்ரோலிலில் கலப்படம் செய்த கிரிமினல் வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து தற்போது அவர்தலைமறைவாக உள்ளார்.
யுவராஜ் சிங்கின் தாத்தா நிரஞ்சன் சிங் தாலிப், ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. பஞ்சாப் மாநில காங்கிரஸ்தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட்டுக்கு சண்டிகர் வழங்கியுள்ள 5-வது வீரர் யுவராஜ் சிங்.
ஏற்கெனவே கபில் தேவ், சேதன் சர்மா, அசோக் மல்ஹோத்ரா, யோக்ராஜ் சிங் ஆகியோர் இந்திய கிரிக்கெட்அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications