பாக். முன்னாள் அதிபரின் உதவியாளர் தற்கொலை?
பெஷாவர்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பரூக் அகமத் கான் லெகாரியின் உதவியாளர் சம்ஷேர் அலிகான் துப்பாக்கியால்சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பெஷாவர் அருகே வாஸிராபாத் கிராமத்தில் வசித்து வந்த அவர், குண்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குக்கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
அவரது இடது கண் மற்றும் நெற்றிப் பகுதியில் குண்டுக் காயங்கள் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன.
முன்னாள் அதிபர் லெகாரியின் முதன்மைச் செயலராகப் பணியாற்றியுள்ள சம்ஷேர் அலி கான், சனிக்கிழமையன்றுஅதிகாலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
வீட்டுக் காவல்காரரைப் பார்த்து துப்பாக்கியைச் சுத்தம் செய்துவிட்டாயா என்று அவர் கேட்டுள்ளார். அதன் பிறகுஅவரும், காவல்காரரும் ஒரு அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிக் குண்டு காயம்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர்இறந்துவிட்டார்.
சம்ஷேர் அலி கான் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருடன் ஏற்பட்ட தகராறில்காவல்காரர் அவரைச் சுட்டுக் கொலை செய்தாரா என்று தெரியவில்லை.
போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். லெகாரியின் உதவியாளராக இருந்த சம்ஷேர் அலி கான்,பாகிஸ்தான் வடக்கு ஃபிரன்டியர் மாகாண உள்துறைச் செயலராகவும் பணியாற்றி உள்ளார்.
1997-ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து லெகாரி நீக்கப்பட்டவுடன் சம்ஷேர் அலி கானும் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications