Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான்சி ஊழல் .. வழக்கின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalalithaமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுத் தந்துள்ள டான்சி நில ஊழல் வழக்கின் பின்னணி.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளில் இரண்டுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மூன்றாவது விவகாரமாக டான்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ்ஆகிய நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான டான்சி (தமிழ்நாடு சிறுதொழில் கழகம்) நிலத்தை வாங்கியது.

ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்த பொழுது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கினார்என்றும், பத்திரப்பதிவில் முறைகேடுகள் செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நிலத்தைக் குறைந்த விலைக்குவாங்கியதால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இதைக் காரணம் காட்டி சிபிசிஐடி போலீஸார் ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசிப், ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூர சுந்தர பாண்டியன்,டான்சி நிறுவன தலைவர் சீனிவாசன் மற்றும் அதிகாரி நாகராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சென்னை 3 வது தனிநீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிஜெயலலிதா சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ் ஜெயலலிதாவை டான்சி வழக்கிலிருந்து விடுவித்தார்.

Jayalalitha with Sasikala in a Marriageசுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்:

சென்னை ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,ஜெயலலிதாவை, டான்சி ஊழல் வழக்கிலிருந்து விடுவித்தது தவறு என்றும், அவரை மீண்டும் டான்சி வழக்கில் சேர்த்து, தனிக்கோர்ட் விசாரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, தனிக்கோர்ட் நீதிபதி அன்பழகன், டான்சி வழக்கில் ஜெயலலிதாவை மீண்டும் சேர்த்து விசாரித்து வந்தார். இவ்வழக்கில் அரசுத்தரப்பில் மொத்தம் 50 பேர் சாட்சியம் அளித்தனர்.

ஜெயலலிதா தரப்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஐ.ஏ.எஸ்.அதிகாரி சுந்தரேசன் உள்பட 12 பேர் சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தனிக்கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் டான்சி நிலம் வாங்கியது தொடர்பாகஎனக்கு எதுவும் தெரியாது. பத்திரத்தில் நான் கையெழுத்துப் போடவில்லை. போலி கையெழுத்து உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜெயலலிதாவின் இந்த வாக்குமூலம் டான்சி நில வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. வக்கீல்களின் இறுதிகட்ட விவாதத்தின்போது ஜெயலலிதாசார்பில், டெல்லி, சுப்ரீம்கோர்ட் வக்கீல் வினோத் அர்விந்த் பாப்டேவும், அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நடராஜனும் கோர்ட்டில் ஆஜராகிவாதாடினார்கள்.

கடந்த 29 ம் தேதியுடன் டான்சி வழக்கு விசாரணை முடிந்தது. குற்றவாளிகள் தரப்பில் 50 சாட்சிகளையும் அரசு தரப்பில் 12 சாட்சிகளையும் நீதிபதிவிசாரணை நடத்தினார். இதையடுத்து 9 ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று தனிக்கோர்ட் நீதிபதி அன்பழகன்தெரிவித்திருந்தார். தற்போது 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+