வைகோ, வாழப்பாடி ராமமூர்த்தி கருத்து
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளருக்கு கிடைத்துள்ள சிறை தண்டனையை மதிமுக, தமிழக ராஜிவ் காங்கிரஸ் வரவேற்றுள்ளன. ஜனதாதளம் எதிர்த்துள்ளது.
ம.தி.மு.க. தலைவர் வைகோ:
ஜனநாயகத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும் சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்.ஊழல் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக முன்னாள் தல்வர்ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு தனி நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை தீர்ப்பு கூறியுள்ளது. இதுவரவேற்கத்தக்கது.
அதிமுக ஆட்சியில் கோடி கோடியாக கொள்ளை அடித்து ஜனநாயக மரபை காலில் போட்டு மிதித்த ஜெயலலிதாவுடன் மூப்பனார்கூட்டணி வைத்துள்ளார். இந்த தீர்ப்புக்கு பிறகு அவர் என்ன சொல்லப் போகிறார்? என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜெயலலிதா மட்டுமல்ல, நாட்டின் பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு கூட நாளை மறுநாள் நீதிமன்றத்தில் தண்டனைதரப்படவிருக்கிறது. எனவே ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி:
ஒரு முதல்வரே அரசாங்க சொத்துக்களை வாங்குவது முறைகேடு மட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகம் என்பதை நீதிமன்றம்உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனை மூலம் மீண்டும் நீதி நிமிர்ந்துள்ளது.
தங்கக் காசுகளை பெற்றுக் கொண்டு தங்கமான ராசாக்கள் அளித்த தீர்ப்பு குப்பைக் கூடைகளில் தூக்கி எறியப்பட்டு விட்டன.
மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஜி.ஏ.வடிவேலு:
இந்த தீர்ப்பு அதிர்ச்சியானது. இது இறுதியான தீர்ப்பல்ல. இதை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்வார். உயர் நீதிமன்றம்தண்டனை பற்றி முடிவு செய்யும். அதுவரை ஜெயலலிதா குற்றவாளி ஆக மாட்டார். அதனால் அதிமுக - ஜனதா தளம் உறவுபாதிக்காது
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications