சுப்ரீம் கோர்ட் அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் கைது
டெல்லி:
டெல்லியில், சுப்ரீம் கோர்ட் அருகே செவ்வாய்க்கிழமை காலை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வாலிபர் பெயர் உபேந்திரா மொகந்தி. அவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாம் என்றுகூறப்படுகிறது. டெல்லியிலுள்ள திலக் மார்க் போலீஸார், உபேந்திராவிடம் குண்டுவெடிப்பின் பின்னணி குறித்துதுருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, காலை 11.50 மணிக்கு சுப்ரீம்கோர்ட் அருகே உள்ள பகவான் தாஸ் சாலையில் வெடிகுண்டுவெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாவலர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
குண்டு வெடித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படையினர் சுப்ரீம் கோர்ட் விரைந்தனர்.
காயமடைந்தவர்கள் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கான்ஹா ராம், மற்றும்சந்தோஷ் (22) என அடையாளம் தெரிய வந்துள்ளது. இன்னொருவர் யார் என்று தெரியவில்லை.
யு.என்.ஐ.
சுப்ரீம் கோர்ட் அருகே குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்












Click it and Unblock the Notifications