சட்டம் தன் கடமையை செய்துவிட்டது: பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சட்டம் தன் கடமையை சரிவரச்செய்துள்ளது என்று பாஜக முன்னணித் தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்யா நாயுடு கூறினார்.

மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில்அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதில்:

ஜெயலலிதாவோடு நாங்கள் கூட்டணி வைத்திருந்தபோது ஊழல் கட்சியோடு கூட்டணி சேரலாமா என்று இங்குள்ள த.மா.காவும்,கம்யூனிஸ்ட் கட்சிகளும் கண்டன குரல் எழுப்பின. ஆனால், அப்போது ஜெயலலிதா எந்த தண்டனையும் பெறவில்லை. அவர் மீதுவழக்கு மட்டும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இப்போது அவர் ஊழல் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்அவரோடு கைகோர்த்துள்ள அதே த.மா.காவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் என்ன சொல்லப் போகின்றன? என்ன நிலை எடுக்கப்போகின்றன?

ஊழல் எதிர்ப்பு தான் பா.ஜ.கவின் அடிப்படைக் கொள்கை. அதில் இருந்து ஒருபோதும் பா.ஜ.க. விலகிச் செல்லவில்லை என்பதைகடந்த வாரம் நடந்த நிகழ்வுகள் புரிய வைக்கும்.

எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு தண்டனை, போபர்ஸ் வழக்கில் இந்துஜாசகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் என்று ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் நிடந்து கொண்டிருக்கின்றன என்றார்அவர்.

விமான நிலையத்தில் அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+