பஸ்களை எரிக்கும் அதிமுகவினர்
கும்பகோணம்:
டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 3 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்துகும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு அரசு பஸ் எரிக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே அமராவதி கிராமத்தில் அதிமுக தொண்டர்கள் இந்த பஸ்சை எரித்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.
வலங்கைமான் வட்டத் தொகுதி அதிமுக செயலாளர் குருமூர்த்தி மற்றும் மேலும் 4 கட்சித் தொண்டர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டதாகவும் போலீஸார் கூறினர்.
திங்கள்கிழமை இரவு மன்னார்குடியிலிருந்து வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ்சை கும்பல் ஒன்று வழிமறித்து நிறுத்தியது. பின்னர் பஸ்சிலுள்ள 10 க்கும்மேற்பட்ட பயணிகளை வெளியே இறங்கச் சொல்லிவிட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்தது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் செல்லுமுன் பஸ் எரிந்துசாம்பலாகியது.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏ.க்கள் ராமநாதன், கே.தங்கமுத்து, விஜயபாலன் ஆகியோர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications