இது இறுதித் தீர்ப்பு அல்ல .. மூப்பனார்
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கூறப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்து கூறதயங்குகிறேன் என்று தமாகா தலைவர் மூப்பனார் தெருவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனி நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துச் சொல்லதயங்குகிறேன். காரணம் இது இறுதி தீர்ப்பு அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை என்பதே என் கருத்து என்றார்.
சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சி மாநிலத் தலைவி சந்திரலேகா இந்த தீர்ப்பைவரவேற்றுள்ளார். ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் வழங்கப்பட்ட இந்த தண்டனைமுழுக்க முழுக்க நியாயமானது என்று கூறியுள்ளார் அவர்.
இதுகுறித்து சந்திரலேகா வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக நெறிமுறைகளைசுயலாபத்திற்காக துஷ்பிரயோகம் செய்து பொது வாழ்க்கையை களங்கப்படுத்தும்ஊழல் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான சாட்டையடி இது.
இதுவரை அரசியல்வாதிகளால் செய்யப்படும் ஊழல், வன்முறை ஆகியவற்றிற்குவிசாரணை கமிஷன்கள் மட்டுமே அமைக்கப்பட்டது. ஊழல் புரிந்தஅரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனையை பெற்றுத் தர முடியும் என்பதைஇந்த தீர்ப்பின் மூலம் நிரூபித்துக் காட்டியிருப்பவர் சுப்ரமணியசாமி.
கட்சிக்காக எந்த தியாகம் செய்யாமல் கட்சியை குறுக்கு வழியில் அபககரித்தஜெயலலிதாவும், அவரது தோழியும் எல்லாவிதமான பொருளாதார குற்றங்களைசெய்து சாதனை படைத்துள்ளனர். ஊழல் செய்வதில் உச்சக்கட்டத்தை அடைந்தஇவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமானது என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications