இலங்கை தேர்தல்:80 சதவீத வாக்குப் பதிவு
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தல் பல்வேறு முறைகேடு புகார்களுடன் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 80 சதவீதவாக்குகள் பதிவாகின.
மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. பல மாவட்டங்களில் வாக்குப் பதிவின்போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்தன. மொத்தம்57 புகார்கள் வந்துள்ளதாக தேர்தலைக் கண்காணித்த தனியார் நிறுவனமான தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது
இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 11 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனருக்குப் பரிந்துரை செய்துள்ளோம்.இதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளில் எதிர்காலத்தில் தேர்தல் வன்முறை, முறைகேடு நடக்காமல் தவிர்க்க முடியும்.
தேர்தலின்போது பல பகுதிகளில் கொலை, குண்டுவீச்சி, வாக்குப் பெட்டிகளை கடத்துதல், ஆள்மாறாட்டம், கள்ள ஓட்டுப் போடுதல் என அனைத்துவகையான தேர்தல் முறைகேடுகளும் நடந்துள்ளன.
தேர்தல் பிரசாரம் துவங்கிய நாள் முதல் இதுவரை நடந்த தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் 63 பேர் இறந்துள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களிலேயேஅதிக வன்முறை கொண்ட தேர்தல் இதுதான்.
கண்டி மாவட்டத்தில், பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக இரண்டு ஆளும் கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்தனர் என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கையில், மொத்தம் உள்ள 1.20 கோடி வாக்காளர்களில் 80 சதவீதம் பேர் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில்வாக்களித்துள்ளனர்.
மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நல்ல வாக்குப் பதிவு இருந்தது. விடுதலைப் புலிகள், ராணுவ வீரர்கள் மோதலால் பாதிக்கப்பட்டுள்ளவடக்கு மாகாணத்தில், குறைந்த அளவே வாக்குப் பதிவு நடந்துள்ளது.
வாக்கு எண்ணும் பணி 800 மையங்களில் துவங்கவுள்ளது. முதல் கட்ட முடிவுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு மேல் வெளியாகும் என்றுதெரிவிக்கப்பட்ட.து.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications