கல்கத்தா கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமான என்ஜினில் தீ
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு:
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கல்கத்தா சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்தின் என்ஜினில் திடீர் என தீப்பிடித்துக் கொண்டதால், விமானம் மீண்டும்காத்மாண்டு விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். ஏர்பஸ் ரக விமானமான இது கிளம்பிய ஒருநிமிஷத்திலேயே என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானிகள் அவசரமாகவிமானத்தை காத்மாண்டு விமான நிலையத்திற்குத் திருப்பினர்.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் யாருக்கும் காயம் ஏதும்இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications