நாகப்பாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவு
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்ததாகக் கூறிக் கொள்ளும் நாகப்பாவை வரும் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தும்படி கர்நாடக போலீசுக்கு அம் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட 3 பேரில் நாகப்பாவும் ஒருவர். இவர் கடந்த 28ம் தேதி காட்டிலிருந்து வெளியேவந்தார். தான் தப்பி வந்ததாகக் கூறினார். ஆனால், அவரை வீரப்பனே சில முக்கிய கோரிக்கைகளுடன் அனுப்பிவைத்ததாகவே கூறப்படுகிறது.
பெங்களூரில் முதல்வர் கிருஷ்ணா, ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் நாகப்பாவைக் காணவில்லை.அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை அரசே ஒளித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அவரை ஆஜர்படுத்தக் கோரி ஹொட்டேபக்ஷா ரங்கசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில்கூறப்பட்டிருந்ததாவது:
நாகப்பா தப்பி வந்ததாக கூறுகிறார். ஆனால், இதில் பல சந்தேகங்கள் உள்ளன. அவருடன் நிருபர்களைக் கூடசரியாகப் பேச போலீஸ் அனுமதிக்கவில்லை. வீரப்பன் அவரிடம் சொல்லி அனுப்பி விவரங்களைக் கூட நாகப்பாவெளியே சொல்லவில்லை. மொத்தத்தில் நாகப்பா உண்மையை பேசவில்லை.
அவருக்குத் தான் இந்த கடத்தல் நாடகம் குறித்த முழு விவரங்களும் தெரியும். ஆகவே நாகப்பா முழு உண்மையைவெளியே சொல்ல வேண்டும். மாநிலமே ஸ்தம்பித்துப் போய் பதற்றமும் பிரச்சனையும் நிலவும் இந்தசூழ்நிலையில் நாகப்பா உண்மைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு தனது மனுவில் ரங்கசாமி கூறியுள்ளார்.
இந்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசோக் பான், நீதிபதி குருராஜன் ஆகியோர் அடங்கிய டிவிஷனபெஞ்ச் விசாரித்தது. பின்னர் நாகப்பாவை வரும் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அழைத்து வருமாறு அரசுக்குநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications