ரஷியாவில் கோலாகல தசரா
மாஸ்கோ:
ரஷ்யாவில் தசரா பண்டிகையை முன்னிட்டுக் கொண்டாடப்படும் துர்கா பூஜை கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது.
அங்கு வாழும் இந்தியர்கள், வங்கதேசத்தினர், நேபாளிகள் மற்றும் இலங்கை மக்கள் துர்கா பூஜையைக்கொண்டாடினார்கள்.
தலைநகர் மாஸ்கோவில் உள்ள மக்கள் நல்லுறவுக் கழகத்தில் துர்கா பூஜையின் தொடக்க விழா நடந்தது.நிகழ்ச்சியில், ரஷ்யாவிற்கான இந்தியத் தூதர் ரவி மற்றும் ரஷ்யாவிற்கான வங்கதேச தூதர் ரஹ்மான் ஆகியோர்மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தனர்.
அவர்கள் பேசுகையில், ரஷ்யாவில் வாழும் வெளிநாட்டினர் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், வெற்றிகரமாகவும்வாழ வாழ்த்துவதாகத் தெரிவித்தனர். துர்கா பூஜையை அடுத்து துர்கை அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகளும்நடத்தப்பட்டது.
அங்குள்ள கலையரங்கத்தில் ஜவஹர்லால் நேரு கலைக்குழுவினரின் இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டது. இந்திய பொழுதுபோக்குத் திரைப்படங்களும் காட்டப்பட்டன. அங்கு இந்திய நடனங்களானபரதநாட்டியம், ஒடிசி, கதக், கதகளி போன்ற நாட்டியங்களின் அரங்கேற்றம் நடந்தது.
பூஜைக்குழு சார்பில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி போன்றவையும் நடத்தப்பட்டது.பெரியவர்களுக்காக சமையல் போட்டியும் நடந்தது. துர்கா பூஜையையும், கலைநிகழ்ச்சியையும் காண ரஷ்ய மக்கள்அதிகம் வந்திருந்தனர்.
விழாவில் தென்இந்திய சமையலை ருசிபார்த்த நீலி ருசேவியா கூறுகையில், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இந்தியாசென்று விட்டு திரும்பியுள்ளார். இதனால் இங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரால்கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு அதிக அளவு ரஷ்யர்கள் வந்துள்ளனர் என்றார்.
ரஷ்யாவின் பிரபலமான என்.டி.வி. துர்கா பூஜை மற்றும் கலைநிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications