Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக் காதலுக்காக குழந்தையை கிணற்றில் வீசிய தாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளக் காதலனை கைப்பிடிக்க பெற்றக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று விட்டுகபட நாடகம் ஆடிய 24 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் சீனிவாசா நகர் பட்டம்மாள் தெருவில் வசிப்பவர் கண்ணன்.இவரது மனைவி கிருத்திகா (24). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களுக்குதிருமணம் நடந்தது. ஹேமமாலினி என்ற பெண் குழந்தை உள்ளது.

கண்ணன் ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பிட்டராக பணிபுரிகிறார். தாய், தந்தை,மனைவி என்று கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலையில் கிருத்திகா அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், என்னுடைய மாமியாரும், நாத்தனாரும் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டநேரத்தில் நானும் என் குழந்தையும் வீட்டில் தனியாக இருந்தோம். அப்போது இரண்டுபேர் என் வீட்டுக்குள் நுழைந்து என்னை கற்பழிக்க முயன்றனர். அவர்களை நான்அரிவாள் மனையால் தாக்கினேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் என் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டனர். என் குழந்தையை மீட்டுத் தாருங்கள் என்று போலீசில் கொடுத்த புகாரில்கிருத்திகா கூறியிருந்தார்.

புகாரை பெற்ற போலீசார் விசாரணையில் இறங்கினர். கணவர், மாமனார், மாமியார்,நாத்தனார், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து விட்டு கடைசியில் கிருத்திகாவைவிசாரித்தபோது அவர் கூறிய தகவல்கள் முரண்பட்டன.

சந்தேகமடைந்த போலீசார் கிருத்திகாவை போலீஸ் பாணியில் விசாரித்தபோதுஉண்மை அம்பலமானது. அவர் கூறிய தகவல்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன.

தான் பெற்ற குழந்தையை தானே கிணற்றில் வீசிக் கொன்ற கோரத்தை கிருத்திகா ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவல்படி புதன் கிழமை காலை 60 அடி ஆழக் கிணற்றில்கிடந்த 11 மாதக் குழந்தையின் பிணம் மீட்கப்பட்டது.

அதன் பின்னர் போலீசாரிடம் கிருத்திகா அளித்த கண்ணீர் வாக்குமூலத்தில் அவரதுகள்ளக் காதல் கதையும், கள்ளக் காதலனை மணக்க போட்ட திட்டமும் தெரிய வந்தது.

கிருத்திகாவின் சொந்த ஊர் காரைக்குடி. கல்லூரியில் படித்தபோது ஹரிகரன்என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஹரிகரன் மிகவும் புத்திசாலி. கல்லூரியில் முதல்மாணவர். இதனால் அவர் மீது கிருத்திகாவுக்கு பைத்தியமே பிடித்திருந்தது.

ஹரிகரனின் தந்தையும், கிருத்திகாவின் தந்தையும் நண்பர்கள் என்பதால் இவர்களதுகாதல் வலுவடைய வாய்ப்புகள் அதிகரித்தன. இருவரும் காரைக்குடியில் காதலர்களாகவலம் வந்தனர்.

கல்லூரிரி படிப்பு முடிந்ததும் கிருத்திகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தபோது காதல்விவகாரம் தெரியவந்தது. ஆனால், இருவரின் பெற்றோரும் உடன்பட மறுக்கவேகாதல் தோல்வியில் முடிந்தது. கிருத்திகாவுக்கும் கண்ணனுக்கும் திருமணம் முடிந்தது.

சென்னையில் வசித்து வந்த கிருத்திகாவை மறக்க முடியாமல் காதலன் ஹரிகரன்தவித்தார். தொலைபேசியில் இருவரும் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். பின்னர்வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிகரன் சென்னை வரத் துவங்கினார். திருமணம்முடிந்த பிறகும் இருவரும் பழைய காதல் லீலையை தொடர்ந்தனர்.

கிருத்திகா அளவுக்கு அவரது கணவர் கண்ணன் படித்தவரல்ல. 10-வது படித்து விட்டுபிட்டராக இருப்பவர். ஆனால், ஹரிகரனோ எம்.எஸ்.சி. தங்கப் பதக்கம் பெற்றவர்.அதனால் அவர் மீது மோகமும், கட்டிய கணவர் மீது வெறுப்பையும் காட்டத்துவங்கினார் கிருத்திகா. அவர் மூலம் பெற்ற குழந்தை ஹேமமாலினியையும்பிடிக்கவில்லை.

தாய்ப்பாசம் அற்ற நிலையில் தாய்ப்பால் கொடுக்க மறுத்தார். மாமியார், கணவர்வற்புறுத்தியும் தனது அழகு கெட்டு விடும் என்று சண்டை போட்டார். இப்படிசண்டையும் சச்சரவும் வீட்டில் வளர வளர காதலன் மீதுள்ள காமம் அதிகரித்தது.

இந்நிலையில் காதலன் ஹரிகரனுக்கு மணமுடிக்க ஏற்பாடு நடக்கும் தகவல் தெரிந்தது.ஹரிகரனை அவசரமாக வரவழைத்துப் பேசினார். அவரும் கிருத்திகாவை மறக்கமுடியாமல் தவிப்பதாக சொன்னார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றுதீர்மானித்தனர்.

ஆனால், குழந்தை? இந்த கேள்வி தடையாக தெரிந்தது.

அந்த குழந்தை மீது கணவருக்கும், அவரது பெற்றோருக்கும் கொள்ளைப் பாசம்.எனவே அதை விட்டு விடலாம் என்று கூட யோசித்தனர். ஆனால், அதனால்பின்னாளில் பிரச்னைகள் ஏற்படலாம்; எனவே எந்த தடையும் இல்லாமல் திருமணம்செய்து கொள்வது தான் நல்லது என்று காதலன் யோசனை சொன்னபடி குழந்தையைகொன்றார்.

எப்படி...? செவ்வாய் கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலனைவரவழைத்தார். இருவரும் சீரியஸாக டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்குழந்தை பொம்மைகளுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைகொன்றால் தான் ஆச்சு என்று ஹரிகரன் இறுதியாக சொல்லி விட, அவரது கண்எதிரிலேயே அந்த காரியத்தை கள்ளக் காதலுக்காக செய்து விடத் துடித்தார் கிருத்திகா.

ஹரிகரன் கண் முன்பே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கினார். பெற்றத்தாயை கண்டதும் சிரித்துக் கொண்டே தாவியது அந்த பிஞ்சு. அதன் முகத்தை கூடபார்க்காமல் அப்படியே தூக்கிக் கொண்டு போய் வீட்டின் பின் புறத்தில் இருந்தகிணற்றில் வீசி விட்டு வேகமாக திரும்பி வந்து விட்டார் கிருத்திகா.

குழந்தையின் கதை முடிந்ததும் காதலன் வெளியே சென்று விட்டார். ஹரிகரன் சென்றுவிட்டதை உறுதி செய்த பின்னர் கத்தி ஊரைக் கூட்ட ஆரம்பித்தார் கிருத்திகா.

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை கிருத்திகாவே கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார்வாக்குமூலமாக. இப்போது கள்ளக் காதலனைக் கைது செய்ய காரைக்குடிவிரைந்துள்ளது போலீஸ் படை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+