இலங்கை தேர்தல்: முன்னணியில் சந்திரிகா கட்சி
கொழும்பு:
அதிபர் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி, இலங்கை நாடாளுமன்றத்திற்குநடந்த தேர்தலில் இதுவரை முடிவு தெரிந்த 74 தொகுதிகளில் 52 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
சந்திரிகா கூட்டணிக்கும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்இடையே 6 சதவீத வாக்கு வித்தியாசம்தான் இருக்கிறது. மக்கள கூட்டணி 47.41 சதவீதவாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 41.47 சதவீத வாக்குகளையும் இதுவரைபெற்றுள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 6.8 சதவீத வாக்குகள்கிடைத்துள்ளன. ஆனால் ஒரு இடத்திலும் அது வெற்றி பெறவில்லை.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் மக்கள் கூட்டணிக்கு 18.7 லட்சம் வாக்குகளும்,ஐக்கிய தேசியக் கட்சிக்கு 16.6 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜனதா விமுக்திபெரமுனா கட்சிக்கு 2.5 வாக்குகள் கிடைத்துள்ளன.
இலங்கை தேர்தல் விதிப்படி பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில்தான்நாடாளுமன்றத்தில் சீட்டுகள் கிடைக்கும். அதன்படி, மக்கள் கூட்டணிக்கு 52இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 17 இடங்களும் தமிழர் கட்சிகளான தமிழர்ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழ விடுதலைக் கழகம் கட்சிகளுக்கு தலா 2இடங்களும், ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன.
கம்பஹா, மாத்தரா, கலுத்தரா, கல்லே, அம்பாரை மாவட்டங்களில் மக்கள்கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கபொலனருவா, அனுராதபுரா ஆகிய பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தலைநகர் கொழும்பில், ஐக்கிய தேசியக் கட்சி 20 இடங்களில் முன்னணியில் உள்ளது.வட யாழ்ப்பாணத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முன்னணியில் உள்ளது.
ஊரடங்கு விலக்கப்பட்டது:
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை இலங்கை முழுவதிலும் அமல் செய்யப்பட்டஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.
தேர்தல் வன்முறையையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது கண்டி மற்றும்சில பகுதிகளில் நடந்த தேர்தல் வன்முறை மற்றும் முறைகேடு காரணமாக வாக்குஎண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்தவுடன்இங்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications