தூத்துக்குடியில் வன்முறை: குண்டு வீச்சில் டி.எஸ்.பி காயம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஓட்டல் முதலாளி மீது நடந்த தாக்குதலைத் தொடரந்து நடந்ததாக்குதலால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறையில்டி.எஸ்.பி. உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா என்பவர். இவருடையமகன் அன்பழகன் (40) அங்கு சைக்கிள் கடையும், இரவு ஓட்டலும் நடத்தி வருகிறார்.இவர் முத்தரையர் சங்க மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கும்அதே பகுதியில் இருக்கும் சிலருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு இருந்துவந்தது.

இதன் காரணமாக புதன்கிழமை நள்ளிரவு அன்பழகன் தனது இரவு ஓட்டலில் ஜான்,தாசன், ராஜா ஆகியோருடன் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்றுஒரு கும்பல் வந்து அவர்களை தாக்கியது. அந்தக் கும்பல் அரிவாள், கத்தி போன்றபயங்கரமான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதில் படுகாயமடைந்த அன்பழகன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ளஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் தகவல் அறிந்துவிசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அன்பழகனின் ஆதரவாளர்கள் பலர்அன்பழகனைத் தாக்கியவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல்நடத்தினர். பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகளின் மீது வெடிகுண்டுகள்வீசப்பட்டது. வீடுகளில் இருந்து பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

அந்தப் பகுதியில் இருந்தவர்கள் தாக்குதலுக்கு பயந்து தப்பி ஓடினர். ஆனால்தாக்குதல் நடத்திய கும்பல் அவர்களை விடாமல் துரத்தி தாக்குதல் நடத்தினர்.வெடிகுண்டுகளையும் வீசினர். இதில் பலர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி தளவால் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மனைவி தமிழரசிஎன்பவர் வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்தார். இந்த வன்முறை சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வன்முறைக்காரர்களை விரட்டி அடித்ததனர்.ஆனால் அந்த கும்பல் போலீசார் மீது க்ல்வீச்சு தாக்குதலிலும், வெடிகுண்டு வீச்சிலும்ஈடுபட்டது. இதில் போலீஸ் டி.எஸ்.பி ஞான பாண்டியன் படுகாயமடைந்தார்.

தொடர்ந்து கும்பல் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் வானை நோக்கி மூன்றுமுறை சுட்டனர். இதனால் கும்பல் அஞ்சி ஓடியது.

தூத்துக்குடி கலெக்டர் பெரோஸ் கான், நெல்லை எஸ்.பி.கண்ணப்பன்,டி.ஐ.ஜி.சுக்லாஆகியோர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

சம்பவ பகுதியில் பலத்த போலீஸ்காவல் போடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியகும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+